ஆசை வார்த்தை கூறி சிறுமிகளை கடத்திய இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

கிருஷ்ணகிரியில் இரண்டு சிறுமிகளை கடத்திய இரண்டு இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஊத்தங்கரையை அடுத்த ஆனந்தூர் ரெட்டிபட்டியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை காணவில்லை என்ற புகாரின் பேரில் ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.
இதில் தர்மபுரியைச் சேர்ந்த சீனிவாசன் தனது நண்பருடன் சேர்ந்து ஆசைவார்த்தை கூறி இரண்டு சிறுமியரையும் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
சிறுமிகள் இருவரும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Comments