போர் பாதிப்புகள் தொடர்பாக உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி..!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, போர் பாதிப்புகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
பேச்சுவார்த்தைகள் மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும், எந்தவித அமைதி முயற்சிகளிலும் பங்களிக்க இந்தியா தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பாக ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர், அணுமின் நிலையங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நீண்டகால பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments