விவசாய கடன் பெற வீட்டு ஆவணத்தை மனைவி கொடுக்க மறுத்ததால் விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை.!

0 2912

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே விவசாய கடன் பெற வீட்டு ஆவணத்தை மனைவி கொடுக்க மறுத்ததால் விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார்.

குமாரபுரத்தைச் சேர்ந்த 47 வயதான ராஜசேகர், ரப்பர் பால் வடிக்கும் தொழில் மற்றும் வாழை விவசாயம் செய்து வந்தார். விவசாயத்தை விரிவு படுத்த கூட்டுறவு வங்கியில் கடன் பெற நினைத்து வீட்டு பத்திரத்தை மனைவி ராஜினி யிடம் கேட்டதாகவும், ஆனால் மது அருந்தும் பழக்கம் கொண்ட கணவரை நம்பி அவர் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ராஜசேகர் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments