வலிப்பு வந்தபோது இரும்புக்கம்பியை கழுத்தில் குத்திக்கொண்ட இளம் பெண்ணிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த அரசு மருத்துவர்கள்

0 2776
வலிப்பு வந்தபோது இரும்புக்கம்பியை கழுத்தில் குத்திக்கொண்ட இளம் பெண்ணிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த அரசு மருத்துவர்கள்


கோவையில் வலிப்பு வந்த 28 வயது இளம் பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.

வலிப்பு வந்தபோது கையில் கொடுக்கப்பட்ட இரும்புக்கம்பி கழுத்தில் குத்தியதாக பெண்ணின் உறவினர்கள் தெரிவித்த நிலையில், கை கால்கள் செயலிழந்து கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஸ்கேன் மற்றும் இதர பரிசோதனை முடிவில் கழுத்தில் வலது பக்கம் பாய்ந்த கம்பியானது மூச்சுக் குழாய் உணவு குழாய் மற்றும் ரத்த நாளங்களில் மிக அருகில் பாய்ந்து தண்டுவட எழும்பினை தொலைத்து தண்டுவடத்தில் குத்தி இருப்பது தெரிய வந்தது

மருத்துவமனை முதல்வர் நிர்மலா அவர்களின் ஆலோசனைப்படி நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அறுசிகிச்சை செய்து கழுத்தில் பாய்ந்த கம்பியை நோயாளிக்கு எந்தவித பாதிப்பும் இன்றி அகற்றினர் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளி கை கால்கள் இயக்கம் சீரடைந்தது .

நோயாளிக்கு எவ்வித பாதிப்புமின்றி சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments