வீட்டு வாசலிலேயே பிரபல ரவுடி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை

வீட்டு வாசலிலேயே பிரபல ரவுடி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை
எண்ணூர் வஉசி நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜாகிர் உசேனை அவரது வீட்டு வாசலிலேய 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தனர்.
திருமணம் செய்யாமல் ஜாகிர் உசேனுடன் ஒன்றாக வாழும் செந்தாமரை என்பவர் அளித்த புகாரின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் சுந்தர் என்ற ரவுடியை ஜாகிர் உசேன் ஏற்கனவே தாக்கியுள்ளார்.
தற்போது சிறையில் இருக்கும் சுந்தர், உடனிருக்கும் அருண்குமாரிடம் சொன்னதன்பேரில் ஜாமினில் வெளியே வந்த அருண்குமார் இந்த கொலையை செய்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
Comments