திடீரென பெயர்ந்து விழுந்த காவல் நிலையத்தின் மேற்கூரை.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய போலீசார்.!

திடீரென பெயர்ந்து விழுந்த காவல் நிலையத்தின் மேற்கூரை.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய போலீசார்.!
சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது.
பி-3 வியாசர்பாடி காவல் நிலைய வளாகத்தில் குற்றப்பிரிவு, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து புலனாய்வு பிரிவுகள் ஒரே இடத்தில் செயல்பட்டு வருகின்றன.
பழமையான இக்கட்டடத்தில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளதாக துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு காவல்நிலையத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக போலீசார் காயங்கள் இன்றி தப்பினர்.
Comments