"ட்டோ" செய்ய உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவர் அவரது நண்பரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பல்..!

"ட்டோ" செய்ய உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவர் அவரது நண்பரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பல்..!
சென்னை வளசரவாக்கத்தில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை ட்டோ செய்ய உதவுவது போல நடித்து கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவர் சஞ்சய், தனது நண்பர் அத்வைத்- உடன் மது அருந்திவிட்டு ஆலப்பாக்கத்தில் உள்ள நண்பரை பார்க்க பைக்கில் சென்றுள்ளனர்.
சிறிது தூரத்தில் பெட்ரோல் தீர்ந்ததால் இருவரும் சாலையில் நின்றிருந்த நிலையில், அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கும்பல், பைக்கை டோப் செய்ய உதவுவது போல நடித்து கத்தியை காட்டி மிரட்டி ஒரு பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் இருவரிடமும் இருந்து செல்போன்கள், வாட்ச், மூவாயிரம் ரொக்கம், one plus ear pad உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு அந்த கும்பல் தப்பியதாக சஞ்சய் போலீசில் புகாரளித்துள்ளார்.
Comments