தெலுங்கானாவில் ஒரே நேரத்தில் 28 லட்சம் பேர் பாடிய தேசிய கீதம்..!

0 2391
தெலுங்கானாவில் ஒரே நேரத்தில் 28 லட்சம் பேர் பாடிய தேசிய கீதம்..!

தெலுங்கானாவில் 11 ஆயிரம் இடங்களில் ஒரே நேரத்தில் 28 லட்சம் பேர் தேசிய கீதம் பாடினர்.

75-வது சுதந்திர தின நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறைகள், வயல்வெளிகளில் காலை 11:30 மணியளவில் தேசிய கீதம் ஒலித்தது.

ஐதராபாத் மெட்ரோ ரயில் 58 வினாடிகளுக்கு நிறுத்தப்பட்டு, ஊழியர்களும்-பயணிகளும் ஒருமித்தமாக தேசிய கீதம் பாடினர்.

11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் தேசிய கீதம் பாடப்பட்டதாகவும், 28 லட்சம் பேர் இதில் பங்கேற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments