டெல்லி சர்வதேச விமானநிலையத்தில் டிஜி யாத்ரா செயலி மூலம் பயணிகளுக்கு புதிய சேவை!

0 2245

டெல்லி சர்வதேச விமானநிலையத்தில் facial recognition எனப்படும் முக அங்கீகார முறையின் மூலம் பயணிகளை அனுமதிக்கும் புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

டெர்மினல் 3 நுழைவு வாயிலில் உள்நாட்டு விமானப்பயணம் மேற்கொள்ளும் பயணிகள் Digi Yatra செயலியில் தங்களைப்பற்றிய விபரங்களை பதிவு செய்வதன் மூலம் இந்த புதிய சேவையை பெறமுடியும்.

காகித பயன்பாடற்ற, நேரடி தொடர்பற்ற வகையில், பயணிகளின் முக அங்கீகாரத்தை வைத்து இது செயல்படுத்தப்படுகிறது. 

முக அடையாளம் மூலம் பயணிகளின் அடையாள அட்டை, தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று மற்றும் விமானத்தின் போர்டிங் பாஸ் ஆகியவை தானியங்கி முறையில் சரிபார்க்கப்பட்டு Check point கள் அனைத்திலும், மூன்று விநாடிகளுக்குள் உடனடியாக அனுமதி கிடைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments