இரும்பு பெயர் பலகை கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய மாநகர பேருந்து ஓட்டுநர் கைது..!

இரும்பு பெயர் பலகை கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய மாநகர பேருந்து ஓட்டுநர் கைது..!
சென்னை ஆலந்தூர் மெட்ரோ நிலையம் அருகே இரும்பு பெயர் பலகை கம்பத்தின் மீது மாநகர பேருந்து மோதி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி நேற்று அதிவேகமாக வந்த பேருந்து, பெயர்ப்பலகை தாங்கிய இரும்பு கம்பத்தின் மீது மோதியது.
விபத்தில் ராட்சத இரும்பு கம்பம் பெயர் பலகையுடன் சாலையில் விழுந்ததில், படுகாயமடைந்த இருசக்கர வாகன ஓட்டி சண்முகசுந்தரம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மாநகர பேருந்து ஓட்டுநர் ரகுநாத்தை போலீசார் கைது செய்தனர்.
Comments