மாடுகளை ஏற்றி வரும் லாரிகளை மடக்கி மாமூல் வசூல் செய்யும் பாஜக நிர்வாகிகள்..!

0 2164
மாடுகளை ஏற்றி வரும் லாரிகளை மடக்கி மாமூல் வசூல் செய்யும் பாஜக நிர்வாகிகள்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இரவில் மாடுகளை ஏற்றிவரும் லாரிகளை வழிமறித்து மாமூல் கேட்ட பாஜக நிர்வாகிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணியாற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நகர நிர்வாகி தினேஷ்குமார் என்பவர் மாடுகளை ஏற்றிக்கொண்டு வரும் லாரிகளை கண்டதும் உடனே செல்போனில் அம்மாவட்ட பாஜக இலக்கிய பிரிவு தலைவர் சௌந்தர்ராஜனுக்கு தகவல் தெரிவிப்பதும், பின்னர் அந்த லாரிகளை மடக்கி மாமூல் வசூலிப்பதும் வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆந்திராவில் இருந்து வந்த ஒரு லாரியின் ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக உள்ள அவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

மாமூல் சம்பந்தமாக பாஜக நிர்வாகிகள் தினேஷ்குமாரும், சௌந்தர்ராஜனும் செல்போனில் பேசிக்கொள்ளும் உரையாடல் சமூகவலை தளங்களில் பரவிவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments