சர்வதேச நிதி அமைப்பிடமிருந்து 1.2 பில்லியன் டாலர் கடன் உதவி கோரும் பாகிஸ்தான்.!

சர்வதேச நிதி அமைப்பான ஐஎம்எப்பிடம் கடன் கிடைக்க பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஜாவேத் பாஜ்வா, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அதிகாரிகளின் ஆதரவைக் கோரினார்.
அந்நாடுகளின் அதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சு வார்த்தை நடத்திய அவர் 1 புள்ளி 2 பில்லியன் டாலர் கடனுதவி பாகிஸ்தானுக்குக் கிடைக்க உதவும்படி கேட்டுக் கொண்டார்.
இதே போல் அவர் அமெரிக்க அதிகாரிகளிடமும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. சர்வதேச நிதி அமைப்பிடமிருந்து கடன் கிடைத்தால் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நிலைகுலைந்துள்ள பாகிஸ்தானுக்கு புத்துயிர் கிடைக்க உதவியாக இருக்கும் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Comments