அலுவலக நேரம் முடிந்தும் பணியாற்றியதால், இளைநிலை உதவியாளரை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டிய தலைமை ஆசிரியை

0 153096

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு பள்ளியில், அலுவலக நேரம் முடிந்தும் பணியாற்றிய இளநிலை உதவியாளரை, தலைமை ஆசிரியை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டி விட்டுச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் இப்பள்ளியை தலைமை ஆசிரியர் உமா பூட்டிவிட்டுச் செல்வது வழக்கம். மாலை 4.15 மணி வரையில் பள்ளி செயல்படும் நிலையில், வேலை பளு காரணமாக சில ஊழியர்கள் இரவு 7 மணி வரை இருந்து பணியாற்றுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அலுவலக நேரம் முடிந்தும் இளநிலை உதவியாளர் செல்வ கதிரவன் என்பவர் பணியாற்றியுள்ளார்.

இதனால் தானும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் தலைமை ஆசிரியை அவரை கிளம்புமாறு கூறிய நிலையில், அதை ஏற்க மறுத்த செல்வ கதிரவன் பணி முடிந்தே செல்வேன் எனக் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு, தலைமை ஆசிரியை அவரை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டியுள்ளார்.

பிறகு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில் கதவை திறந்து விட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments