இலங்கை விவகாரம் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் : நாளை நிர்மலா சீதாராமன்,ஜெய்சங்கர் முன்னிலையில் நடைபெறுகிறது..!

இலங்கை விவகாரம் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் : நாளை நிர்மலா சீதாராமன்,ஜெய்சங்கர் முன்னிலையில் நடைபெறுகிறது..!
இலங்கையில் நிலவி வரும் நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க மத்திய அரசு நாளை அவசரமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் முன்னிலையில் இலங்கை மக்களின் நலன்கள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.
திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதற்காக நேற்று கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தின.
இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் நிலை குறித்தும் தமிழ்நாடு எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, தம்பிதுரை ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
Comments