அமர்நாத்தில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்ட 2 தீவிரவாதிகளை போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்த பொதுமக்கள்.!

0 2079

அமர்நாத்தில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்ட 2 தீவிரவாதிகளை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஜம்மு- - காஷ்மீரின் ரியாசி மாவட்டம், துக்சன் தாக் என்ற கிராமத்தில், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இரண்டு பேர் பதுங்கியிருந்தனர்.அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த கிராம மக்கள், இருவரையும் சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர்.

இவர்கள் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருவரிடம் இருந்தும் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ஏராளமான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடித்து கொடுத்த கிராம மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments