"உயர்கல்வி உதவித்தொகைக்கு ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம்" - தமிழக அரசு

0 1039
"உயர்கல்வி உதவித்தொகைக்கு ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம்" - தமிழக அரசு

உயர்கல்வி உறுதித் திட்டத்தில் உதவித் தொகை பெற மாணவியர் விண்ணப்பிக்கும் காலக்கெடுவை ஜூலை 10 வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

பல்தொழில்நுட்பம், கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவியர் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெற அரசின் இணையத்தளத்தில் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தக் காலக்கெடுவை மேலும் பத்து நாள் நீட்டித்துள்ளதுடன், இது குறித்த தெளிவுரைகளை 14417 என்கிற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments