மகாராஷ்ட்ரா அரசியலில் பரபரப்பை கிளப்பிய ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஆதரவாக 42 முதல் 46 எம்.எல்.ஏக்கள்.!

மகாராஷ்ட்ரா அரசியலில் பரபரப்பை கிளப்பிய ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஆதரவாக 42 எம்.எல்.ஏக்கள் கவுஹாத்தியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 4 எம்.எல்ஏக்கள் தமக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ஷிண்டே கூறியுள்ளார். தமது ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே தங்களுக்கு தேசிய கட்சியின் ஆதரவு இருப்பதாக பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்தார்.
பெரும்பாலான சிவசேனா மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஷிண்டே பக்கமாக அணி மாறியதால் முதலமைச்சர் உத்தாவ் தாக்கரே அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஷிண்டே சிவசேனாவின் சட்டமன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக 37 எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் துணைசபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Comments