காஷ்மீரில் என்கவுன்ட்டரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0 1345

ஜம்மு காஷ்மீரில் அனந்தநாக் பகுதியில் இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

கொல்லப்பட்டவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாயிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய காவல்துறை ஐஜி விஜயகுமார் இருவரின் பெயர்களும் அடையாளம் காணப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த இருவரும் பாஜகவின் ஊராட்சித் தலைவர் ரசூல் தார் மற்றும் அவர் மனைவியை கடந்த ஆண்டு கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவர்கள், இதே போல் குல்காம் மாவட்டத்தில் கடந்த மாதம் ஆசிரியை ரஜினி பாலாவை சுட்டுக் கொன்ற வழக்கிலும் தொடர்புடையவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments