உறவினருக்கு இருக்கை வேண்டுமெனக் கூறி அமர்ந்திருந்த பெண்ணை எழவைத்த காவலர்.. வீடியோ எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனையும் பறிக்க முயன்சி..!

0 5575
உறவினருக்கு இருக்கை வேண்டுமெனக் கூறி அமர்ந்திருந்த பெண்ணை எழவைத்த காவலர்.. வீடியோ எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனையும் பறிக்க முயன்சி..!

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில், இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை, காவலர் ஒருவர் தனது உறவினருக்கு இருக்கை வேண்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக எழச் செய்ததாக கூறப்படும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

சென்னை செல்லவிருந்த அந்த குளிர்சாதன பேருந்தில் இருந்த அப்பெண்ணின் கணவர் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனை வீடியோ எடுத்த இளைஞரின் செல்போனையும் காவலர் பறிக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண், அவரது கணவர், மற்றும் வீடியோ எடுத்த இளைஞர் ஆகிய மூவரையும் காவலர் முருகேசன் காவல்நிலையம் அழைத்துச் சென்ற நிலையில், காவல் ஆய்வாளர் சமரசம் பேசி மூவரையும் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments