சூரிய சக்தியில் இயங்கக் கூடிய சோலார் காரை தயாரித்துள்ள நெதர்லாந்து நிறுவனம்..!

0 1622

மின்சார சார்ஜிங் இன்றி சூரிய சக்தியில் நாளொன்றுக்கு 70 கிலோ மீட்டர் தூரம் இயங்கக் கூடிய சோலார் காரை நெதர்லாந்தை சேர்ந்த லைட் இயர் என்ற தொடக்க நிலை மின்சார கார் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி உள்ளது.

லைட் இயர் ஒன் மாடல் காரின் மேற்பகுதி மற்றும் பேனட் பகுதியில் 5 சதுர மீட்டர் சுற்றளவுக்கு பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் கார் இயக்கத்திற்கு தேவையான சூரிய சக்தி ஆற்றலை உருவாக்குகிறது.

அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் கார், ஸ்டார்ட் செய்த பத்து விநாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த சோலார் கார் விரைவில் சந்தைக்கு வர இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments