256 நடமாடும் மருத்துவ வாகன சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

0 1934

இல்லம் தேடி மருத்துவ சிகிச்சை திட்டத்தின் கீழ், 256 நடமாடும் மருத்துவ வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வலுப்படுத்த 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் வழங்கப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, கடந்த ஏப்ரலில் 133 மருத்துவ வாகனங்களின் சேவை தொடங்கிவைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை கொட்டிவாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இரண்டாம் கட்டமாக எஞ்சிய மருத்துவ வாகனங்களின் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த மருத்துவ வாகனத்தில் இடம்பெற்றுள்ள ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார உதவியாளர் ஆகியோர் கிராமங்களுக்கு சென்று சேவையாற்றுவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments