இமாச்சலப் பிரதேச சட்டமன்ற வளாகத்தில் காலிஸ்தான் கொடி.. விசாரணைக்கு உத்தரவிட்டார் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர்..!

இமாச்சலப் பிரதேச சட்டமன்ற வளாகத்தில் காலிஸ்தான் கொடி.. விசாரணைக்கு உத்தரவிட்டார் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர்..!
இமாசல பிரதேச சட்டசபை வாசலில் காலிஸ்தான் கொடி பறக்க விடப்பட்டது குறித்து விசாரணைக்கு முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்.
சட்டசபை கட்டிடத்தின் பிரதான வாயிலில் தடை செய்யப்பட்ட சீக்கியர் பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் இயக்கத்தின் கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. மேலும் சட்டசபை கட்டிட சுவரில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களும் எழுதப்பட்டன. போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த கொடிகளை அகற்றினர். அத்துடன் அந்த சுவரில் இருந்தும் கோஷங்களை அழித்தனர்.
Comments