இனி தமிழ் சினிமாவின் டான் சிவகார்த்திகேயன்... உதய நிதி பாராட்டு

0 10981

மிழ்திரையுலகின் டான் சிவகார்த்திகேயன்தான் என்றும் அவர் வைத்தது தான் சட்டம் என்றும் டான் பட முன்னோட்ட வெளியீட்டு விழாவில் உதய நிதி ஸ்டாலின் தெரிவித்தார்

டான் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதய நிதி ஸ்டாலின் , தமிழ்திரையுலகின் டான் சிவகார்த்திகேயன்தான் என்றும் அவர் வைத்தது தான் சட்டம் என்றும் உதய நிதி ஸ்டாலின் நகைச்சுவையாக குறிப்பிட்டார். இதனை கேட்டு சிவகார்த்திகேயன் தன்னடகத்துடன், எழுந்து நின்று கையெடுத்து கும்பிட்டு அப்படி யெல்லாம் இல்லை என மறுக்க டிரைலரிலேயே அப்படி ஒரு டயலாக் வைத்திருப்பதாக உதய நிதி கலாய்த்தார்.

10 நாட்களுக்கு முன்பாகவே தான் டான் படம் பார்த்து விட்டதாகவும் , சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை விட தனக்கு டான் படம் ரொம்ப பிடித்திருந்ததாகவும், படம் பெரிய வெற்றி பெறும் என்றும் பாராட்டினார்

தொடர்ந்து லைக்கா இது போன்ற நல்ல படங்களை தயாரிக்க வேண்டும் என்றும், அனைத்து படங்களையும் தனது பட நிறுவனத்தின் மூலமே வெளியிட வேண்டும் என்றும் உதய நிதி பேசினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments