பீஸ்ட் பட வெளியீட்டையடுத்து உற்சாக மிகுதியில் தியேட்டர் கண்ணாடியை உடைத்த விஜய் ரசிகர் கைது

0 4869
பீஸ்ட் பட வெளியீட்டையடுத்து உற்சாக மிகுதியில் தியேட்டர் கண்ணாடியை உடைத்த விஜய் ரசிகர் கைது

சேலத்தில் விஜய்யின் பீஸ்ட் பட வெளியீட்டிற்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர் ஒருவர் உற்சாக மிகுதியில் தியேட்டரில் கண்ணாடியை கையால் உடைத்து சாகசத்தில் ஈடுபட்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.

ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டிபிளக்ஸ் திரையரங்கில் சிறப்பு காட்சியை காண காலையிலேயே திரையரங்கு முன் குவிந்திருந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உற்சாக மிகுதியில் விஜய் ரசிகர் ஒருவர் கண்ணாடியை கையால் உடைத்து கெத்து காட்ட நினைக்கவே, கையில் ரத்தம் கொட்டியது.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தியேட்டருக்குள் உள்ளே சென்று கண்ணாடியை உடைத்த ரசிகரை ரத்தம் சொட்ட சொட்ட கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர், அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நாகர்கோவிலில் பீஸ்ட் படத்தை காண வந்த ரசிகர்கள் ஆர்வ கோளாறில் ஸ்கீரினை கிழித்தும், இருக்கைகளை சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்தனர். இதனால், பாதியிலேயே படத்தை நிறுத்தி ஸ்கிரீனை சரி செய்யும் பணியில் தியேட்டர் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments