10.45 மணிக்கு வந்து, உடனே கேள்வி கேட்க நினைத்தால் எப்படி? காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியை கண்டித்த சபாநாயகர் அப்பாவு

0 3306
10.45 மணிக்கு வந்து, உடனே கேள்வி கேட்க நினைத்தால் எப்படி? காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியை கண்டித்த சபாநாயகர் அப்பாவு

பேரவைக்கு வந்த உடன் கேள்வி கேட்க நினைத்தால் எப்படி என காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணியிடம் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் காலை 11 மணிக்கு நிறைவடைய இருந்த நிலையில், நேரம் நீட்டிக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அப்போது, காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, கேள்வி எழுப்புவதற்காக அனுமதி கேட்டார்.

இதையடுத்து, பேரவையில் உட்கார்ந்தபடி கேள்வி கேட்பது நல்ல பழக்கம் இல்லை என அவரை கண்டித்த சபாநாயகர் அப்பாவு, மூத்த உறுப்பினரான விஜயதாரணி, பேரவைக்கு 10.45 மணிக்கு வந்து விட்டு, உடனே கேள்வி கேட்க நினைத்தால் எப்படி எனவும் கூறினார்.

மேலும், பேரவையில் ஒரு கேள்வி கூட கேட்காமல் பல உறுப்பினர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments