20 நாட்கள் ஒரே காஸ்டியூம் ரியல் பீஸ்ட் நெல்சன்..! பீஸ்ட் நாயகி சொல்கிறார்..!

0 6615
20 நாட்கள் ஒரே காஸ்டியூம் ரியல் பீஸ்ட் நெல்சன்..! பீஸ்ட் நாயகி சொல்கிறார்..!

உண்மையான பீஸ்ட் என்று இயக்குனர் நெல்சன் குறித்து கருத்து தெரிவித்துள்ள , நாயகி பூஜா ஹெக்டே, தொடர்ந்து 20 நாட்களாக தனக்கு ஒரே காஸ்டியூமை கொடுத்து நடிக்கச்சொன்ன நெல்சன் மட்டும் தினம் ஒரு காஸ்டியூமில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்..

ஆந்திராவில் உள்ள ரசிகர்களை கவர்வதற்காக பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் சேவியரும், நாயகை பூஜா ஹெக்டேவும் , தெலுங்கில் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தில்ராஜ் உடன் பங்கேற்ற கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் பேசிய இயக்குனர் நெல்சன், பீஸ்ட் படத்தில் 75 சதவீதம் ஆக் ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பதாகவும், ரசிக்கும்படியான படமாக இருக்கும் என்று கூறினார்.

பீஸ்ட் படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருப்பதால் தான் ரஜினியை வைத்து புதியடம் இயக்க சன் பிக்சர்ஸ் நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாக தில்ராஜ் தெரிவித்தார்

பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே பேசும் போது, இந்த படத்தில் 20 நாட்களுக்கு மேலாக ஒரே காஸ்டியூம் போட்டு தான்உள்பட பலர் நடித்ததாகவும், அப்போது தினம் தினம் வேறு வேறு உடையில் வருபவர் இயக்குனர் நெல்சன் மட்டுமே என்றும் ரியலாகவே பீஸ்ட் நெல்சன் தான் என்று தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments