தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளியை உற்சாகமூட்டும் வகையில் நடனமாடிய செவிலியர்கள்
தெலங்கானா மாநிலத்தில் தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளியை உற்சாகமூட்டும் வகையில் செவிலியர்கள் நடனமாடிய காட்சிகள் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாஸ் என்பவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சீனிவாசிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்படும் நிலையில், அவரது மனச்சோர்வை போக்க மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, செவிலியர்கள் தினசரி அவர் முன் நடனமாடி வருகின்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைலராகி உள்ளது.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து சீனிவாசை சாதாரண வார்டிற்கு மாற்ற முடிவெடுத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Comments