மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மாமனாரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 5 பேர் கைது..!

0 2929

கோவையில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மாமனாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய திட்டம் தீட்டியதாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமாரும் சஹானா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இருவருமே வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், அருண்குமாரை தங்கள் மதத்துக்கு மாறும்படி சஹானா குடும்பத்தினர் வற்புறுத்தினர் என்று கூறப்படுகிறது.

இதற்கு அருண் குடும்பத்தினர் சம்மதிக்காத நிலையில், அருண்குமாரின் தந்தை குமரேசனை கொலை செய்ய சஹானா குடும்பத்தினர் திட்டம் தீட்டினர் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக உறவினர்களிடையே வாட்சப் மற்றும் டெலிபோன் பரிமாற்றங்கள் நடந்துள்ளன.

குமரேசனை சுட்டுக் கொல்வதற்காக கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு நபரிடம் துப்பாக்கி வாங்கவும் அவர்கள் போனில் பேசியது தேசிய புலனாய்வு முகமைக்குத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் கோவை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கவே, முகமதி அலி ஜின்னா, இம்ரான்கான், சதாம் உசேன், பக்ருதீன், ராம்வீர் அஜய் என 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments