வினாத்தாளை வெளியிட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை

0 2001

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள்களை முன்கூட்டியே வெளியிட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் போலூரைச் சேர்ந்த ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வந்தவாசி ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து வினாத்தாள் வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணமான பள்ளிகளைச் சேர்ந்த நபர்கள் மீதும், தேர்வுத்துறை வெளியிட்ட வழிகாட்டுதலை பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையின்படி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை நடைபெறவிருந்த 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வின் வினாத்தாளும் வெளியானதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments