ஈரோட்டில் தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது கவனக்குறைவு காரணமாக மோதிய இருசக்கர வாகனத்தின் சிசிடிவி காட்சி.!

0 10745

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், தாயுடன் சாலையை கடக்க முயன்ற 8 வயது சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அத்தாணி பகுதியை சேர்ந்த மயில்வாகனன், குடும்பத்துடன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஜவுளிக் கடைக்கு சென்ற போது அவரது மனைவி தெய்வப்பிரியா, மகன்கள் ஹரினீஷ், ரூபன் உடன் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த பைக் ஒன்று எதிர்பாராதவிதமாக ஹரினீஷ் மீது வேகமாக மோதியதில், சிறுவன் தூக்கி வீசப்பட்டான்.

தலையில் பலத்த காயமடைந்த சிறுவன், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்தை ஏற்படுத்திய நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments