மத்திய பிரதேசத்தில் செல்போன் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டதை பெற்றோர் கண்டித்ததால் 11 வயது சிறுவன் தற்கொலை.!

0 2882

மத்திய பிரதேசத்தில் செல்போன் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டதை பெற்றோர் கண்டித்ததால் 11 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த அம்மாநில அரசு சட்டம் கொண்டு வர உள்ளது.

போபாலைச் சேர்ந்த சூரியன்ஷ் என்ற சிறுவன் செல்போனில் ஃபையர் ஃபால் என்ற ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியதுடன், அந்த விளையாட்டு தொடர்பாக 6 ஆயிரம் ரூபாயும் செலவழித்துள்ளான்.

இது தெரியவந்ததை அடுத்து சிறுவனை கண்டித்த பெற்றோர் அந்த விளையாட்டை செல்போனில் இருந்து நீக்கியுள்ளனர். இந்நிலையில் புதன்கிழமையன்று வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தில் சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.

இச்சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியதை அடுத்து, ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments