சிறப்பு காவல் ஆய்வாளரிடம் கஞ்சா போதையில் ரகளை - 2 இளைஞர்கள் கைது

0 1989

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சிறப்பு காவல் ஆய்வாளரிடம், கஞ்சா போதையில், கையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

உடப்பங்குளம் கிராமத்தில் மண்டலமாணிக்கம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சண்முகவேல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுடுகாட்டு பகுதியில் கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்த நிலையில், கஞ்சா போதையில் இருந்த இருவரும், போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டதோடு, அதில் ஒருவன் தனது உறவுக்காரர் நிரூபர் எனவும், தன்னை ஒன்றும் செய்யமுடியாது எனக் கூறியும் மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மனோஜ் குமார், வினோத் ஆகிய அந்த இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments