கோவையில் கூட்டமாக குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானைகள்

0 1860

கோவை மாவட்டம் வடவள்ளியில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் கூட்டமாக வலம் வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

IOP காலனியில் நேற்று மாலை, 7 காட்டுயானைகள் வரிசையாக நடந்து சென்றன. இது அப்பகுதியில் பொருப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில், யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அப்பகுதி மக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், யானைகள் ஊருக்குள் வந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும், யானைகளை சத்தமிட்டு விரட்டுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments