மலேசியாவில் 3 நாட்களாக தொடர்ந்து கொட்டி வரும் கனமழையால் 6 மாகாணங்கள் நீரில் தத்தளிப்பு.!

0 3007

மலேசியாவில் 3 நாட்களாக தொடர்ந்து கொட்டி வரும் கனமழையால் 6 மாகாணங்கள் நீரில் தத்தளிக்கின்றன. தலைநகர் கோலாலம்பூர், செலங்கோர், கெலண்டன், நெகிரி செம்பிலான், மெலாகா உள்ளிட்ட நகரங்களில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதற்கு முன் மலேசியாவில் பெய்த அதிகபட்ச மழைப் பொழிவை விட தற்போது 2 மடங்கு கூடுதலாக மழை கொட்டி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர் மழையால் கார்கள் மூழ்கின. வணிக வளாகங்கள், குடியிருப்புகள், நீரில் தத்தளிக்கின்றன. மழையுடன் விஷ ஜந்துக்களுக்கும் வீடுகளுக்குள் நுழைவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments