சமூக காடுகளுக்கு அருகே மதுக்கடைக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? - உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள்

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் சமூக காடுகளுக்கு அருகே மதுக்கடை செயல்பட எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் சமூக காடுகளுக்கு அருகே மதுக்கடை செயல்பட எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்ட நிலையில், அதற்கு அருகே புள்ளிமான், குரங்கு, சாம்பல் நிற அணில் உள்ளிட்டவை வாழும் சமூக காடுகள் உள்ளதாகவும், மது அருந்துவோர் பிளாஸ்டிக் கப்புகள், காலி பாட்டில்களை வீசி செல்வதால் வனச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையின்போது, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் இல்லையா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர், சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
Comments