மோட்டார் அறை இடிந்து கிணற்றுக்குள் விழுந்ததில் பெண் மாயம் ; மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்

0 1663
மோட்டார் அறை இடிந்து கிணற்றுக்குள் விழுந்ததில் பெண் மாயம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மண் சரிவு காரணமாக கிணற்றை ஒட்டியவாறு இருந்த மோட்டார் அறை இடிந்து கிணற்றுக்குள் விழுந்ததில், மாயமான பெண்ணை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலை வயலுக்கு வேலைக்கு சென்ற அஞ்சலை அந்த பெண் இரவு வரை வீடு திரும்பாத நிலையில், வயலுக்கு சென்று பார்த்த போது, கிணற்றுக்கு அருகே இருந்த மோட்டார் அறை இடிந்து, கிணற்றுக்குள் விழுந்திருந்துள்ளது. அதற்கு அருகிலேயே அஞ்சலை கொண்டு சென்ற சாப்பாடு கூடை, செருப்பு ஆகியவை கிடந்துள்ளன.

இந்த நிலையில், தொடர் மழையால், மண் சரிந்து, மோட்டார் அறை இடிந்து விழுந்த நிலையில், அதற்கு அருகிலேயே நின்ற அஞ்சலையும் கிணற்றுக்குள் விழுந்திருக்கக் கூடும் என்ற அடிப்படையில், தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிணற்றுக்குள் இருக்கும் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி வரும் நிலையில், நெல் வயல்களுக்கு நடுவே கிணறு அமைந்துள்ளதால், மீட்பு இயந்திரங்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments