நவ.29 ஆம் தேதி எம்பிக்கள் அனைவரும் ஆஜராக வேண்டும்.. ராஜ்யசபா பாஜக எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு

0 1943
வரும் 29 தேதி அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும் போது மாநிலங்களவை பாஜக எம்பிக்கள் அனைவரும் தவறாது ஆஜராக வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வரும் 29 தேதி அன்று நாடாளுமன்ற  குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும் போது மாநிலங்களவை பாஜக எம்பிக்கள் அனைவரும் தவறாது ஆஜராக வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அன்று மிகவும் முக்கியமான அலுவல் ஒன்று அவையில் மேற்கொள்ளப்பட உள்ளதால் எம்பிக்கள் அனைவரும் வந்து அரசுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என கொறடா உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவை அரசு தாக்கல் செய்ய உள்ளதால் இந்த கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments