தென் மேற்கு வங்கக் கடலில் தற்போதைய சூழ்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாது - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 8961
தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி, தற்போதைய சூழ்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி, தற்போதைய சூழ்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் எனக் முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போதைய சூழலில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறாது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், தமிழகத்தில் மிக கனமழை பொழிவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருப்பதாகவும், ஓரிரு மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதனிடையே, அந்தமான் கடல் பகுதியில் வருகிற 29-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதற்கு பிறகான அடுத்த48 மணி நேரத்தில் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் எனக் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments