பெண் டாக்டர்கள் வன்கொடுமை பின்னணி... 2 மருத்துவர்கள் கைது

0 4667

பெண் மருத்துவர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக கைதான, 2 ஆண் மருத்துவர்களை பணிநீக்கம் செய்து, மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காலத்தில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர்களிடம், தகாத முறையில் நடந்துகொண்டதாக வந்த புகாரில், சக மருத்துவர்கள் வெற்றிச் செல்வன் மற்றும் மோகன்ராஜை, தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், அவர்களை பணிநீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பெண் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு, பாலியல் தொல்லை அளிப்பவர்கள் மீது, விசாகா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments