காஷ்மீரில் நடப்பாண்டில் 130க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்

0 1163
நடப்பாண்டில் 133 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்

காஷ்மீரில் நடப்பாண்டில் 130க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறை தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று ஸிராஸ் மவ்லவி மற்றும் யாவர் பட் ஆகியோர் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டார். இதில் ஸிராஸ் கடந்த 2016ம் ஆண்டு பல பொதுமக்களை கொன்றுள்ளதாக விஜயகுமார் குறிப்பிட்டார்.

மேலும் ஸ்ரீநகர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி அமீர் ரியாஸ் உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் உயர்மட்டத் தளபதிகள் உள்பட 133 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments