தமிழ்நாட்டில் 4 மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு,..

0 2128
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் 4 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் 4 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்குமாறு, கடந்த ஜூனில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. புதிய மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக, வார்டு மறுவரையைறை பணிகளை முடித்து தேர்தலை நடத்த, மேலும் 7 மாத கால அவகாசம் வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை அவகாசம் வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் கேட்டது. 4 மாத கால அவகாசம் மட்டுமே வழங்கிய உச்சநீதிமன்றம் அதற்குள் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments