இலங்கை மீனவர்கள் தாக்குதலை கண்டித்து 2ஆவது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தம்

0 945

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை மீனவர்கள் 7 பேர் மீது கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோடிக்கரைக்கு தென் கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் வழிமறித்து தாக்கியதோடு, 3 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர்.

தாக்குதலை கண்டித்து வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக மீனவர்களை வழி மறித்து தாக்கி பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக இலங்கை மீனவர்கள் 7 பேர் மீது வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments