இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 1400

இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்தார்.

டெல்லியில் உள்ள தேசிய ராணுவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், அனைத்து நாடுகளுடனும் சமாதானத்தையும் நன்மதிப்பையும் பேணுவதில் இந்தியா உறுதியுடன் உள்ளது என்றார்.

அதேநேரத்தில், நாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் எல்லைப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments