மணப்பாறையில் கன மழையால் 500க்கும் அதிகமான வீடுகளில் புகுந்த மழை நீர்

0 1755

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரவில் பெய்த கனமழையால் 500க்கும் அதிகமான வீடுகளில் மழை நீர் புகுந்ததுடன், மின்தடையும் ஏற்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

மணப்பாறையின் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் அப்பு அய்யர் குளத்தில் கரையின் ஒரு பகுதி உடைந்ததால் ராஜீவ் நகர், இந்திரா நகர், சேது ரெத்தினபுரம் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.

இதனால் மக்கள் மின் மோட்டார் மூலம் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றினர். மணப்பாறையில் 113.4 மில்லி மீட்டர் மழை பெய்ததால் திருச்சி மாவட்டத்திலேயே அதிக மழை அளவாக பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments