25ந் தேதி நடக்கவிருந்த சார்க் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு ரத்து

0 1497

சார்க் மாநாட்டில் ஆப்கன் பிரதிநிதியாக அஷ்ரப் கனியால் நியமிக்கப்பட்டவரை அனுமதிக்கக் கூடாது என்றும், தாலிபான் பிரதிநிதியை அங்கீகரிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கோரியதை ஏற்க நேபாளம் மறுத்துவிட்டது.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைக் கொண்ட தெற்காசிய மண்டல ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு சார்க் என அழைக்கப்படுகிறது. ஆப்கனில் அதிகாரத்தைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் தாலிபான் பிரதிநிதியையே சார்க் மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்கக் கோரி அமைப்பின் தலைமையான நேபாளத்துக்குப் பாகிஸ்தான் கடிதம் எழுதியது.

அந்தக் கோரிக்கையை ஏற்க நேபாளம் மறுத்து விட்டதுடன், வரும் சனியன்று நடைபெற இருந்த சார்க் வெளியுவு அமைச்சர்கள் மாநாட்டையும் ரத்து செய்துள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments