கந்து வட்டிக் கொடுமையால் நையாண்டி மேளக் கலைஞர் விஷமருந்தி தற்கொலை

0 2415

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கந்துவட்டி கொடுமை காரணமாக நாட்டுப்புறக் கலைஞர் ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திம்மராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த நையாண்டி மேளக் கலைஞர் பிரம்மராஜன். 7 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சிவசிதம்பரத்திடம் மூன்றரை லட்ச ரூபாயை கடனாக வாங்கி இதுவரை 10 லட்சம் ரூபாய் வட்டியாக மட்டுமே செலுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆனால் அசல் ஒரு லட்சம் மட்டுமே அடைந்திருக்கிறது என்றும் மேலும் 9 லட்ச ரூபாய் தர வேண்டும் என்றும் சிவசிதம்பரம் நெருக்கடி கொடுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால் அருணாசலம், பார்த்திபன் என மேலும் இருவரிடம் கடன் வாங்கியுள்ளார் பிரம்மராஜன். 3 பேரிடமிருந்தும் நெருக்கடி அதிகரிக்கவே விஷமருந்தி பிரம்மராஜன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் அருணாசலத்தை கைது செய்த போலீசார், மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments