கர்நாடகத்தில் இருந்து காவிரியில் நீர்திறப்பு, மேட்டூர் அணைக்கு 22,875 கன அடி நீர்வரத்து

0 1863

கர்நாடகத்தில் 124 புள்ளி 8 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் 116 அடிக்குத் தண்ணீர் உள்ளது. அணைக்கு ஒன்பதாயிரத்து 32 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து ஒன்பதாயிரத்து 600 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

84 அடி உயரமுள்ள கபினி அணையில் 78 அடிக்குத் தண்ணீர் உள்ளது. அணைக்கு மூவாயிரத்து 863 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் ஐயாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடகத்தின் இரு அணைகளிலும் இருந்து தொடர்ந்து ஐந்தாவது நாளாக 14 ஆயிரத்து 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அத்துடன் கர்நாடகத்திலும், தமிழகத்திலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 19 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஐந்தருவி, சினி பால்ஸ், மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துப் பாய்கிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 16 ஆயிரத்து 670 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் 22 ஆயிரத்து 875 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 71 அடியாகவும், நீர் இருப்பு 33 புள்ளி 6 டிஎம்சி ஆகவும் உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஐயாயிரம் கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்களின் பாசனத்துக்கு 650 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments