ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 46 இந்தியர்கள் வருகை... மீட்புப் பணியில் களம் இறங்கியது விமானப்படை

0 3511

ஆப்கானிஸ்தானில் இருந்து 46 இந்தியர்களுடன் இந்திய விமானப்படை விமானம் தாயகம் திரும்பியது. மேலும் பலரை வெளியே மீட்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

தாலிபன்கள் ஆப்கானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றியதாக அறிவித்ததையடுத்து ஆயிரக்கணக்கானோர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் திரண்டனர். விமானத்தில் முண்டியடித்துச் செல்ல முயன்ற பலரால் அங்கு குழப்பமான நிலைமை காணப்பட்டது.
விமானத்தைப் பிடித்துத் தொங்கிய 3 பேர் விமானத்தில் இருந்து விழுகிற வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கின

விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடைபெற்றன, கூட்டத்தைக் கலைக்க அமெரிக்க ராணுவத்தினர் சுட்டதாகக் கூறப்படும் நிலையில் விமான நிலைய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். விமான நிலையத்தை நோக்கிச் செல்லுபவர்களை தாலிபன்களும் சுட்டுத் தள்ளுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் அனைத்து விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருப்பதாக ஆப்கான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் விமானப்படையின் விமானங்கள் மூலம் தங்கள் நாட்டவரை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. விமான நிலையக் கட்டுப்பாட்டை வைத்துள்ள அமெரிக்க வீரர்கள் ராணுவ விமானங்களை மட்டும் அனுமதிக்கின்றனர்..இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று நேற்றிரவு 46 பேரை மீட்டு வந்தது. எஞ்சிய இந்தியர்கள் அனைவரையும் அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments