அமீரக கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
Mar 11, 2026
உலகம்
மொஜ்தபாவை அரசியல் வாரிசாக தேர்வு செய்ய வேண்டாமென உயில் எழுதிய காமேனி
Mar 11, 2026 08:50 AM
24
மொஜ்தபாவை அரசியல் வாரிசாக தேர்வு செய்ய வேண்டாமென உயில் எழுதிய காமேனி
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, தனது மகன் மொஜ்தபா காமேனியை அரசியல் வாரிசாக தேர்வு செய்ய வேண்டாம் என்று உயில் எழுதிவைத்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்த ஈரானின் ஜனநாயகத்திற்கான தேசிய ஒன்றிய தலைவர் கோஸ்ரோ இஸ்ஃபஹானி, மொஜ்தபா காமேனிக்கு ஈரானை வழிநடத்துவதற்குத் தேவையான அனுபவமும் அரசியல் அந்தஸ்தும் இல்லை என்று அவரது தந்தை நம்பியதாக கூறினார்.
வழக்கமாக ஈரானின் உச்ச தலைவரை 'நிபுணர்கள் சபை தான் தேர்ந்தெடுக்கும், ஆனால், மொஜ்தபாவின் நியமனம் அந்த முறைப்படி நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மாறாக, சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படை எனப்படும் ஈரான் ராணுவத்தின் அழுத்தம் காரணமாகவே மொஜ்தபா காமேனி வாரிசாக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu