கொரோனா எதிர்ப்பு பணியில் உயிர் நீத்த மருத்துவர் சண்முக பிரியா..! துணிவு மற்றும் சாகசத்திற்கான கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர்

0 2623

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு, துணிவு மற்றும் சாகசத்திற்கான கல்பனா சாவ்லா விருதினை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.

வீட்டுத் தனிமையில் இருந்த கொரோனா நோயாளிகளுக்கு வீட்டிற்கே சென்று சிகிச்சை அளித்து வந்த அனுப்பானடி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சண்முகப்பிரியா, கடந்த மே மாதம் கொரோனா பாதித்து உயிரிழந்தார்.

அவரது தன்னலமற்ற மருத்துவ சேவையை பாராட்டும் வகையில், துணிவு மற்றும் சாகசத்திற்கான கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டது.

கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சண்முகப்பிரியாவின் கணவர் சண்முகப் பெருமாள் விருதினை பெற்றுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments